என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராப்ரி தேவி"
பாட்னா:
ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரிதேவி நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உள்ளது. எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போதே அவர் இந்த நிபந்தனையைதான் முன் வைத்தார்.
2016-ம் ஆண்டு தொடக்கத்தில் தனது பிரதமர் ஆசையை அவர் லாலு பிரசாத்திடம் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் தன்னை பிரதமர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவ் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் நிதிஷ் குமாரின் திட்டத்தை லாலு பிரசாத் ஏற்கவில்லை. மற்ற கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி விட்டுதான் இதுபற்றி தெரிவிக்க முடியும். எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும்.
நான் மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று எனது கணவர் லாலு கூறினார். இதனால் அவர் மீது நிதிஷ் குமாருக்கு கோபம் ஏற்பட்டது. ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் இருந்த கூட்டணியை அவர் முறித்து கொண்டு விலகி சென்றதற்கு இதுதான் காரணமாகும்.
பிரதமர் பதவி மட்டுமின்றி நிதிஷ் குமாருக்கு இன்னொரு பேராசையும் இருந்தது. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியையும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும் இணைக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக அவர் பிரசாந்த் கிஷோரை தூது அனுப்பினார்.
5 தடவை பிசாந்த் கிஷோர் எங்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சிகளை இணைக்க தீவிரம் காட்டினார்கள். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. இதனால் நிதிஷ் குமாருக்கு எங்கள் மீது கோபம் ஏற்பட்டது.
இன்று எங்கள் குடும்பத்தில் இருந்து எனது மகன் தேஜ்பிரதாப் யாதவ் பிரிந்து சென்றுள்ளார். எங்கள் குடும்பத்துக்கு எதிராக எங்கள் மகனை வைத்து தூண்டி விடுகிறார்கள். எங்கள் குடும்பத்தை உடைக்க சதி நடக்கிறது.
பா.ஜனதா தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களும் எங்கள் குடும்ப ஒற்றுமையை சீர் குலைக்க சகுணி வேலை செய்கிறார்கள். ஆனால் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக உள்ளது. அந்த ஒற்றுமையை என்றுமே யாராலும் எதுவும் செய்ய இயலாது.
எனது மகன்கள் தேஜஸ் வியாதவும், தேஜ்பிரதாப் யாதவும் வேறு வேறு அல்ல. அவர்கள் இருவரும் ஒன்றுதான். அவர்களை பிரிக்க நினைத்தால் தோல்வி தான் ஏற்படும்.
தேஜ்பிரதாப் எங்களை பிரிந்து இருப்பது தற்காலிகம் தான். விரைவில் அவர் எங்களை தேடி வருவார்.
இவ்வாறு ராப்ரிதேவி கூறினார். #Rabridevi #NitishKumar
பீகார் முன்னாள் முதல்- மந்திரியும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பணியாற்றி இருந்தார்.
லாலுபிரசாத் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஓட்டல்களை இயக்க தனியாருக்கு ஒப்பந்தம் அளித்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்தது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் லாலுவுக்கு கடந்த 19-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதை 28-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. பொதுவான ஜாமின் மனு மீது இன்று (28-ந்தேதி) தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி அருண்பரத்வாஜ் உத்தரவிட்டார்.
ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் பிணை தொகையும், அவர்கள் சார்பில் மற்றவர்கள் அதே பிணை தொகையும் வழங்க வேண்டும் என்று ஜாமின் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். கால்நடை தீவன வழக்கில் லாலு சிறை தண்டனை பெற்று தற்போது ஜெயிலில் உள்ளார். #IRCTCScam #LaluPrasadYadav
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளில் லாலு பிரசாத் தவிர மற்ற அனைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கினார். இந்த ஜாமீன் காலம் இன்று நிறைவடைந்ததையடுத்து, இன்று மீண்டும் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது, சிபிஐ வழக்கில் ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அமலாக்கத்துறை வழக்கில் பதில்மனு தாக்கல் செய்வதற்கு அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நிரந்தர ஜாமீன் வழங்கப்படவில்லை. நவம்பர் 19-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், நவம்பர் 19-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, லாலு பிரசாத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். லாலு பிரசாத் யாதவ் மற்றொரு வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu #RabriDevi #TejashwiYadav
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்